அரியலூர் விண்ணப்ப பெறும் முகாமில் கலெக்டர் ஆய்வு
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பெறும் முகாமை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்.
- அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தல்
அரியலூர்,
அரியலூரில் முதல் கட்டமாக தொடங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டவிண்ணப்ப பெறும் முகாமை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்.வாலாஜாநகரம் ஊராட்சி அலுவலகம், அரசு கலைக் கல்லூரி, ஆர்.சி.நிர்மலா காந்திநடுநிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டவிண்ணப்ப பெறும் முகாமை ஆய்வு செய்த அவர், அங்கு அடிப்படை வசதிகள்,பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கான இருக்கை வசதிகள், கைரேகை பதிவுசெய்யும் கருவிகள், டோக்கன் விநியோகம், மின்னணு சாதனங்களின் செயல்பாடுஉள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மகளிரிடமிருந்துவிண்ணப்பங்களை உடனுக்குடன் பெற்று அவர்களை தாமதமின்றி வீடுகளுக்குஅனுப்பி வைக்கவும் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்டஅலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்துபயனாளிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சென்றடையும் வகையில் அரசுஅலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இந்தஆய்வில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர்வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.