உள்ளூர் செய்திகள்

தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி

Published On 2022-11-18 15:01 IST   |   Update On 2022-11-18 15:01:00 IST
  • தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி நடைபெற்றது
  • அரியலூர் மாவட்ட பூவாணிப்பட்டு அரசுப் பள்ளியில்

அரியலூர்

அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை பெறற்றது.

இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கா.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்து பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த காலக் கட்டத்தில், படிக்கின்ற போதே மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேல்படிப்புக்கு செல்லும் போது, வேலைவாய்ப்பு தகுந்த படிப்பினை தேர்வு செய்து அதனை திட்டமிட்டு படிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர், புத்தகக் கண்காட்சியையும் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்படிப்பில் என்னென்ன படிப்புகளைப் படிக்கலாம் என்று மாணவர்களிடையே எடுத்து ரைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் எம்.வினோத்குமார், சா.மணிமாறன் ஆகியோர் மத்திய, மாநில அரசு பணிகள், தனியார் துறை பணியமர்த்தம் மற்றும் சுயத்தொழில்கள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர்.

முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.பவானி வரவேற்றார்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜராம் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News