உள்ளூர் செய்திகள்
அரியலூரில் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம்
- அரியலூரில் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வக்கீல் சங்க பொதுக் குழு கூட்டம் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் பாரபட்சமற்ற முறையில் விரைவாக நீதி வழங்கும் வகையில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை மிரட்டும் வகையில் செயல்பட்டு வரும் நபர் மீது காவல் துறையினரும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.