உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பேச்சு போட்டி

Published On 2023-03-11 06:02 GMT   |   Update On 2023-03-11 06:02 GMT
  • பள்ளிக் கல்வித் துறை, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
  • வெற்றியாளர்கள் தேர்வு செய்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது

அரியலூர்,

அரியலூரில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அரியலூர் வட்டார வள மையத்தில், வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் க.தமிழ்மாறன், த.மரகதம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மாலா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்து சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.இதில், செந்துறை ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.ராமதாஸ்க்கு முதல் பரிசும்,அரியலூர் ஒன்றியம், முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எம்.எஸ்.செல்வமோகனுக்கு இரண்டாம் பரிசும், தா.பழூர் ஒன்றியம், பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஆறுமுகச்சாமி மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.முடிவில் வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் இரா.இரா ஜேஸ்வரன் நன்றி கூறினார். இப்போட்டிக்கான ஏற்பாடு களை புதிய பாரத எழுத்த றிவுத் திட்ட மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கி.மேகலா ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News