உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- புகையிலை ஒழிப்பு குறித்து நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கீழப்பழூவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ ஆலோசகர் பிரியா, சமூக பணியாளர் வைஷ்ணவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாார ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்று புகையிலைப் பொருட்களால் ஏற்படும் நோய்கள், பொருளாதார சீரழிவு, சமூக பாதிப்புகள், மனநல பாதிப்புகள், தண்டனை சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். ெதாடர்ந்து புகையிலை ஒழிப்போம் என அனைவரும் உறுதிெமாழி ஏற்றுக் கொண்டனர்.