உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
- அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- முகாமுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ம.தீபாசங்கரி தலைமை தாங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், காட்டுப் பிரிங்கியம் மற்றும் கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசா யிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடை பெற்றது. மேற்கண்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் நடை பெற்ற முகாமுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ம.தீபாசங்கரி தலைமை தாங்கி, புதியதாக தயாரி க்கப்பட்ட நுண்ணூ ட்ட மருந்துகள் குறித்து விளக்கி பேசினார். துணைப் பதிவாளர் த.அறப்பளி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணை ப்பதிவாளர் புண்ணிய மூர்த்தி, சார்பதி வாளர் க.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயி களுக்கு பயிற்சி அளித்தனர். 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.