உள்ளூர் செய்திகள்
அரியலூரில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு
- அரியலூரில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது
- அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, சுபம் மறுவாழ்வு மையம் சார்பில் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அமர ஜோதி தலைமை வகித்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் அனைவரிடமும் துண்டு பிரசுரங்க ளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், காவல் துறையினர், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.