உள்ளூர் செய்திகள்
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
- தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதால் குண்டர் சட்டம் பாய்ந்தது
- மாவட்ட எஸ்.பி.பரிந்துரையின் பேரில், கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தழுதாழைமேட்டை சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (வயது 27). இவர், அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மகன் பவித்ரன்(27) ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது குறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து ஜெயமணிக்குமாரை கைது செய்தனர். மேலும் இவர், தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயமணிக்குமார் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.