உள்ளூர் செய்திகள்
- அரியலூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கத்தில் ஒன்றிய குழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி தலைமையில் நடை பெற்றது.
- ஒன்றிய குழு கூட்டத்தில் 31 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கத்தில் ஒன்றிய குழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி தலைமையில், ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் யூனியன் கமிஷனர் குணசேகரன், ஸ்ரீதேவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி, பாப்பா, சரவணன், ராணி, செந்தமிழ்செல்வி, முருகேசன், சுந்தரவடிவேலு, கண்ணகி, ரேவதி, ராதாகிருஷ்ணவேணி, விஜயகுமார், அலுவலக மேலாளர் ஆனந்தன், ஒன்றிய பொறியாளர் கண்ணன், கணக்காளர் ராஜீவ்காந்தி, இளநிலை உதவியாளர் மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய குழு கூட்டத்தில் 31 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.