உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-13 12:28 IST   |   Update On 2023-07-13 12:28:00 IST
  • அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரியலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தபடி ஊதியத்தை வங்கி மூலம் 7-ந் தேதிக்குள் வழங்கிட வேண்டும். ஈஎஸ்ஐ மருத்துவ அட்டை வழங்கிட வேண்டும். பி.எப் பிடித்தம் செய்திட வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஆண்டிமடம் குடிநீர் திட்டப் பணியாளர் சுதாகரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் அ.ஞானசேகரன், கே.கணேசன், க.தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் எம்.ஆத்மநாதன், திருச்சி மாவட்ட பொதுச் செயலர் ஆர்.மருதைராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.சிற்றம்பலம், எம்.சந்தானம் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.



Tags:    

Similar News