உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை

Published On 2023-10-14 12:22 IST   |   Update On 2023-10-14 12:22:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
  • 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரியலூர் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 அட்டவணைகள் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும்2023 அக்டோபர் 5-ந் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்தக ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தால் மருந்தகங்களின் உரிமையாளர் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாத காரணத்திற்காக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News