உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாணவிக்கு பாராட்டு விழா

Published On 2022-10-15 12:15 IST   |   Update On 2022-10-15 12:15:00 IST
  • அரியலூர் மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது
  • தேசிய அளவில் செஸ் போட்டியில் முதலிடம்

அரியலூர்:

தேசிய அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

உடையார்பாளையம், கைகள நாட்டார் தெருவை சேர்ந்த சரவணன் அன்புராஜாவின் இரண்டாவது மகள் ஷர்வானிகா (வயது7). உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர், செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பரிசும் பெற்று வந்துள்ளார்.

கடந்த 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 7 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான எம்.பி.எல் 35 ஆவது ஓபன் அண்ட் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஷர்வானிகா, அனைத்து போட்டிகளிலும் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.

இதனை ெதாடர்ந்து இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்வி அலுவலர் மதலைராஜ், ஆசிரியர் பயிற்றுநர் குறிஞ்சி தேவி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆனந்தபாபு , பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயலட்சுமி,கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஷர்வானிகாவை பாராட்டி பேசினர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் உமா சரஸ்வதி வரவேற்றார். முடிவில் இடைநிலை ஆசிரியர் மைதிலி நன்றி கூறினார்.

Tags:    

Similar News