உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை-அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

Published On 2023-01-03 11:09 IST   |   Update On 2023-01-03 11:09:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கலெக்டர் உத்தரவிட்டார்
  • துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அரியலூரில் முன்னதாக, மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், குடியரசு தின விழாவினை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News