உள்ளூர் செய்திகள்

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

Published On 2023-10-01 12:01 IST   |   Update On 2023-10-01 12:01:00 IST
  • அரியலூர் மின் ஊழியர் வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை நடந்துள்ளது
  • அரியலூர் நகர காவல் துறையினர் வழககு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அரியலூர்,

அரியலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல். உதவி மின் பொறியாளரான இவர், விபத்தில் காயமடைந்து திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி ரேவதி(வயது 41) வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளேச் சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர் வழககு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News