உள்ளூர் செய்திகள்
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் கைது
- மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கிராம நிர்வாக அலுவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன் சுத்தமல்லி நீர்த்தேக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 4 மாட்டு வண்டிகளில் அரசு அனுமதி இல்லாமல் ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் மேலத்தெருவை சேர்ந்த கருப்பையன் (வயது 43), வீரமணி (49), வாத்திகுடிகாடு பகுதியை சேர்ந்த மணியார் (37), உடையார்பாளையம் தெற்கு புது காலனி தெருவை சேர்ந்த சங்கர் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் ஏற்றி வந்த 4 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.