உள்ளூர் செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து 10 ஆடுகள் செத்தது

Published On 2023-09-19 11:58 IST   |   Update On 2023-09-19 11:58:00 IST
  • அரியலூரில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 10 ஆடுகள் செத்தது
  • இடிபாடில் சிக்கி காயமடைந்த இரண்டு வாலிபர்களுக்கு சிகிச்சை

அரியலூர்,

அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் அரியலூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தனியார் மண்டபத்திற்கான கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக அதனை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தன.

கனமழையால் அந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அதன் அருகே கட்டப்பட்டிருந்த ஆடுகளின் மீது சுவரின் இடிபாடுகள் விழுந்தன. இதில் 10 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் சந்துரு (வயது 21), ராஜேஷ் (20) ஆகியோர் காயமடைந்தனர்.இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்தநிலையில், அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இந்த சம்பவம் குறித்து அரியலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News