உள்ளூர் செய்திகள்

ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிய போது எடுத்த படம்.

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தயம்

Published On 2023-10-07 15:23 IST   |   Update On 2023-10-07 15:23:00 IST
  • தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அறிஞர் அண்ணா நெடுந்துர ஒட்டப்பந்தயம் நடைபெற்றது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொதுமக்களி டையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தயம் ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பினை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு மூலமாக தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தயம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவி கள் கலந்து கொண்ட அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தயத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் கலந்து கொண்ட 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் அரசு கலைக்கல்லூரியில் இருந்து , தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடைந்தனர்.

17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடையு மாறும் இரண்டு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000-மும், 2-ம் பரிசாக ரூ.3000-மும், 3-ம் பரிசாக ரூ.2000-மும், 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்க ளுக்கு தலா ரூ.1000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா உட்பட தொடர்பு டைய அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள், வீரர், வீராங்கனைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News