உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் குறைகளை தீர்க்க அலுவலர் நியமனம்

Published On 2022-07-21 03:51 GMT   |   Update On 2022-07-21 03:51 GMT
  • மாவட்ட அளவில் குறைதீர்ப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மாவட்ட குறை தீர்ப்பாளருக்கோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட அளவில் குறைதீர்ப்பு அலுவலராக வக்கீல் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் அடையாள அட்டை, சம்பளம் உள்ளிட்டவைகள் தொடர்பான புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இடங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்களிடம் புகார் மனுக்களை பெற்றுக்கொள்ளவும், மேலும் இதுசம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை நேரடியாகவோ அல்லது மாவட்ட குறை தீர்ப்பாளருக்கோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News