உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைக்கு விண்ணப்பிக்கலாம்: கடலூர் கலெக்டர் தகவல்

Published On 2023-09-29 13:05 IST   |   Update On 2023-09-29 13:05:00 IST
  • ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12- ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னி ட்டு கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து, இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் சட்ட விதிகளை கடைப்பி டித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகா ப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் கடையின் வரைபடம் , உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான அசல் பத்திரம்,உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில், இடத்தின் கட்டட உரிமையாளரிடம் ரூ.20 க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக்க ட்டணம் ரூ.500 அரசுக் கணக்கு தலைப்பில் செலு த்தியதற்கான அசல் செலான் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் விண்ண ப்பதாரர்கள், இ-சேவை மையத்தின் மூலம் இணைய தளத்தில் விண்ணப்பி க்கலாம். மேலும், இணையத ளத்தின் மூலம் விண்ணப்பி க்கப்படும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.மேலும், தற்காலிக பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்ப ங்களை 24 -ந்தேதி ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இ-சேவை மையத்தி ன் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 24-ந் தேதிக்கு பின்னர் விண்ண ப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News