உள்ளூர் செய்திகள்

பழனி கோவில் காலிப்பணியிடங்களுக்காக வந்த விண்ணப்பங்களை மூட்டைகளில் எடுத்து செல்லும் ஊழியர்.

பழனி கோவில் காலி பணியிடங்களுக்கு குவியும் விண்ணப்பங்கள்

Published On 2023-03-16 13:11 IST   |   Update On 2023-03-16 13:11:00 IST
  • பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், அலுவலகஉதவியாளர்கள் உள்பட 281 பணியிடங்களுக்கு மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு வெளியானது.
  • விண்ணப்பங்கள் தபால் மற்றும் கூரியர் மூலமாக மூட்டை, மூட்டையாக வருகின்றன. ஏப்ரல் 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.

பழனி:

பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், அலுவலகஉதவியாளர்கள் உள்பட 281 பணியிடங்களுக்கு மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு வெளியானது. 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு பின்பு தேவஸ்தானத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அரசு வேலைவாய்ப்பை பெறும் எண்ணத்தில் உள்ள பட்டதாரிகள்பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 10 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

பழனி மட்டுமின்றி வெளிஊர்களில் இருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் தபால் மற்றும் கூரியர் மூலமாக மூட்டை, மூட்டையாக வருகின்றன. ஏப்ரல் 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. எனவே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வர வாய்ப்புள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News