உள்ளூர் செய்திகள்
சுற்றுலாத்துறை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அழைப்பு
- சர்வதேச சுற்றுலா தினமான செப்டம்பர் 27ல் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
- சுற்றுலா ஏற்பாட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாமல்லபுரம்:
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சர்வதேச சுற்றுலா தினமான செப்டம்பர் 27ல் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இதில் சுற்றுலா ஏற்பாட்டாளர், உணவகம், தங்கும் விடுதி, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஊழியர், வழிகாட்டி, சாகச சுற்றுலா நடத்துவோர், சமூக ஊடகவியலாளர், சிறந்த சுற்றுலா விளம்பரம், சிறந்த விளம்பர கருத்து, சுற்றுலா சார்ந்த கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.