உள்ளூர் செய்திகள்

  தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட கண்காணிப்பு  குழு கூட்டம்  மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

பள்ளி-கல்லூரிகளில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும்

Published On 2023-06-10 09:58 GMT   |   Update On 2023-06-10 09:58 GMT
  • பள்ளிகள் அருகில் 100 மீட்டருக்குள்  புகையிலை  பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு  புகையிலை   பொருட்களை விற்பனை செய்யப்படுவதில்லை என்ற விளம்பர பலகையை  வைக்க வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகில் 100 மீட்டருக்குள்  புகையிலை  பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு  புகையிலை சம்பந்த்பட்ட  பொருட்களை விற்பனை செய்யப்படுவதில்லை என்ற விளம்பர பலகையை  வைக்க வேண்டும்.

பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் அபராதம் மேற்கொள்ளுவது குறித்து  கலந்தாலோசிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பலகை வைப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. 1064 கல்வி  நிறுவனங்களை  ஆய்வு செய்து, அதில் 222  கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

புகையிலை தடுப்பு திட்டம் சிறப்பாக செயல்பட பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கியும் தொடர்புடைய அனைத்து  துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்படவும் வேண்டும். மேலும், மாவட்ட மருத்துவக் குழுவினரால்  பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது அபராதம்  விதிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார். இக்கூட்டத்தில் துணை இயக்குநர் ஜெயந்தி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News