உள்ளூர் செய்திகள்

விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம்.

விளாத்திகுளத்தில் அம்பாள் வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா

Published On 2023-01-08 13:35 IST   |   Update On 2023-01-08 13:35:00 IST
  • ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது
  • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் அம்பாள் வித்யாலயா பள்ளி தலைவர் வீமராஜ், பள்ளிச் செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜ், ரெபக்கா அனிட்டா, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News