உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

சேலத்தில் நுகர்வோர் அமைப்பின் ஆண்டு விழா

Published On 2023-04-03 15:02 IST   |   Update On 2023-04-03 15:02:00 IST
  • 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது.
  • நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

சேலம்:

சேலம் நுகர்வோர் குரல் அமைப்பின் 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது. நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

ஜெய்ராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் வக்கீல்கள் சங்க செயலாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். சேலம் முள்ளுவாடி கேட் மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக உணவு பாதுகாப்பு மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியி டப்பட்டது. நுகர்வோர் குரல் துணைச்செயலாளர் துரைராஜ், விழா வரவேற்பு குழு துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் அழகிரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News