உள்ளூர் செய்திகள்

முகாமில் சிறப்பாக விவசாயம் செய்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பரிசுகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வழங்கினார்.

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2022-10-30 09:41 GMT   |   Update On 2022-10-30 09:41 GMT
  • குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
  • 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி ஊராட்சி இளங்கார்குடி கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சித் தலைவர் யசோதா சரவணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து, கால் நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் அடங்கிய பொட்டலங்களை கால்நடை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

மேலும், சிறப்பாக விவசாயம் செய்த விவசாயிகளுக்கும் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் முறை சிகிச்சை, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் கண்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் பழனிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கமித்ரா அபிவதி, சரவணன், ராஜா, கால்நடை ஆய்வாளர்கள் தமிழ்வாணன், தனலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், சாந்தி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பக்ருதீன், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News