உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

இழப்பீடு வழங்காததால் ஆத்திரம் : ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Published On 2023-11-23 11:51 IST   |   Update On 2023-11-23 11:51:00 IST
  • சாலைப்பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
  • இழப்பீடு வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக பொள்ளாட்சி முதல் காமலாபுரம் வரை விபத்து இல்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு பகுதியாக லக்கையன்கோட்டை கிராமத்தில் சுமார் 1 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த னர். இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் கனரக எந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்குள் உரிய இழப்பீடு தொகையை வாங்கி தருவதாக கூறி சமரசம் செய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News