உள்ளூர் செய்திகள்

கடத்தூரில் நடந்த பா.ம.க முகவர் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசிய காட்சி.

தருமபுரியில் வேலைவாய்பை உருவாக்க சிப்காட் அமைக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்

Published On 2023-09-12 15:50 IST   |   Update On 2023-09-12 15:50:00 IST
  • பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்
  • தென்பெ ண்ணையாற்றில் வீணாகும் தண்ணீரை தடுப்பணைகட்டி நீரேற்றம் செய்திட வேண்டும்.

கடத்தூர்,  

கடத்தூரில் பா.ம.க. சட்டசபை ஒட்டு சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, அல்லிமுத்து, செந்தில், ராமலிங்கம், இமயவர்மன் வணங்காமுடி, சிவகுமார், மாது, சரவணன் மதியழகன், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது மாவட்ட பகுதியில் இருந்து சுமார். 5 லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் சென்று பணியாற்றி வருவதை தடுக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி கால்வாய் திட்டம், பொதியன் பள்ளம், ஆணை மடுவு நீர்த்தேக்கத் திட்டப்பணிகள், வாணியாறு கால்வாய் நீட்டிக்க வேண்டும்.வள்ளி மதுரை அணை உயர்த்தி அமைக்க வேண்டும், தென்பெண்ணையாற்றில் வீணாகும் தண்ணீரை தடுப்பணைகட்டி நீரேற்றம் செய்திட வேண்டும். ஒவ்வொரு யூனியனிலும் குளிர்பதன கிடங்குகள் அமைத்திட வேண்டும்.தக்காளி, பட்டு, புளி, மரவள்ளி உள்ளிட்ட விவசாய விளை பொருட்க–ளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்க வேண்டும் .

நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கவேண்டு்ம். குவிண்டாலுக்கு தமிழக அரசு ஆதார விலையை குறைந்தது ரூ. 500 உயர்த்தி , நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,700 வழங்கிடவேண்டும் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கபடும் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. பா.ம.க.வில் கடந்த 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டோம். ஜி -20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டும் வாழ்த்துகளையும் தெரி–வித்து கொள்கின்றோம். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் கஞ்சா விற்பனை உச்சத்தில் உள்ளது. அதிகஅளவில் பள்ளி, கல்லுாரி மாண வர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்,

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லுார் பகுதிகளில் மக்களுக்கு பெரும் அவதியாக டாஸ்மாக் உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்வாவிடில் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று செய்தியா–ளர்களிடம் தெறிவித்தார். அப்போது ஸ்டீஸ் சதாசிவம், ஜெயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் சின்ன தம்பி, முனுசாமி வேடியப்பன், சவணன், சின்னசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News