உள்ளூர் செய்திகள்
- பன்னாரி கோவை- சத்தி ரோட்டில் நடந்து சென்றார்.
- விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் பன்னாரி (வயது 60). சம்பவத்தன்று இவர் கோவை- சத்தி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பன்னாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பன்னாரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.