கோப்பு படம்
ஆண்டிபட்டி அருகே ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் போதை வாலிபர் வாக்குவாதம்
- தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- சுமார் 30 வயது மதிக்கத்தக்க போதை வாலிபர் சேத மடைந்த சாலைகளை பார்வையிடாமல் அதிகாரிகள் சென்றுவிடுகிறார்கள் என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலை, மயிலை ஒன்றிய த்திற்குட்பட்ட சிங்கராஜ புரம், வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், மாண வர்களின் கற்றல்திறன், வருகை பதிவேடு பராமரிப்பு குறித்தும் ஆய்வுசெய்தார்.
அங்கு வந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த பொதுமக்கள் கலெக்டரின் வாகனத்தை நிறுத்தி இங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் மாணவர்கள் மற்றும் தொழி லாளர்கள் பாதிக்கப்படு கின்றனர்.
எனவே இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மதுமதி, செய ற்பொறியாளர் ரவிச்சந்தி ரன், ஒன்றிய ஆணை யாளர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், பொறி யாளர்கள் ராமமூர்த்தி, நாகராஜ், பணிமேற்பா ர்வையாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க போதை வாலிபர் சேத மடைந்த சாலைகளை பார்வையிடாமல் அதிகாரி கள் சென்றுவிடுகிறார்கள். அரசு பள்ளி, பால்வாடி ஆகியவற்றை மட்டும் பார்க்காமல் சேதமடைந்த சாலைகளையும் பார்த்து மக்களிடம் அதிகாரிகள் குறைகளை கேட்கவேண்டும் என கூச்சலிட்டார்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.