உள்ளூர் செய்திகள்
இரும்பு கேட் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு
- நுழைவுவாயிலில் இருந்த இரும்பு கேட் ஒன்று திடீரென்று சாய்ந்தது.
- மருத்துவமனைக்கு வழியிலேயே மோகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிப்பேட்டை மேல்தோப்புதெருவைச் சேர்ந்தவர் தணிகாச்சலம். இவரது மகன் மோகன்குமார (வயது34). இவர் குண்டலப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்காக நிறுவனத்திற்கு சென்றார். அங்கு நிறுவனத்தின் நுழைவுவாயிலில் இருந்த இரும்பு கேட் ஒன்று திடீரென்று சாய்ந்தது. அப்போது அந்த வழியாக சென்ற மோகன்குமார் மீது இரும்பு கேட் விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மோகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.