உள்ளூர் செய்திகள்

பர்லியாறில் காலில் காயத்துடன் சுற்றும் யானை

Published On 2023-07-27 14:23 IST   |   Update On 2023-07-27 14:23:00 IST
  • 5-க்கும் மேற்பட்ட யானைகள் குன்னூா் பா்லியாறு மலைப் பகுதிக்கு வந்துள்ளன.
  • 6 போ் கொண்ட குழுவினா் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் இவற்றை உண்பதற்காக மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட யானைகள் குன்னூா் பா்லியாறு மலைப் பகுதிக்கு வந்துள்ளன. இந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து ஒரு யானை தனியாக சுற்றி வருகிறது. இந்த யானையின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மரத்தில் இருந்து பலாப்பழத்தை பறித்து உண்ண முடியாமல் ஆற்றோரத்தில் கொட்டப்பட்டுள்ள பழக்கழிவுகளை உண்டு வருகிறது.

தற்போது காலில் காயத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும் ஒற்றை யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 போ் கொண்ட குழுவினா் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

Tags:    

Similar News