உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

Published On 2023-03-15 15:11 IST   |   Update On 2023-03-15 15:11:00 IST
  • பத்ரகாளிஅம்மன்கோவிலின்தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்
  • இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோதுஇரும்பு உண்டியலைஉடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது. விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் பத்ரகாளிஅம்மன் கோவில். உள்ளது.இந்த கோவிலின் தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது கோவில் முன் பகுதியில் சிமெண்ட் தரையில் புதைத்து வைக்கபட்டிருந்த இரும்பு உண்டியலையாரோ மர்ம நபர்கள் இரவு கடப்பாரையால் குத்தி உடைக்க முயற்சி செய்ததும், அதனை உடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது. கோவிலில் இருந்த பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை.

இது குறித்து இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News