உள்ளூர் செய்திகள்

ஆணி பலகையில் அமர்ந்து யோகாசனம் செய்த மாணவி ஷாஜிதா ஸைனப்.

கடையம் அருகே ஆணி பலகையில் அமர்ந்து யோகாசனம் செய்த 8 வயது மாணவி

Published On 2022-06-21 14:43 IST   |   Update On 2022-06-21 14:43:00 IST
  • மாணவி ஷாஜிதா ஸைனப் மதநல்லிணக்கம் வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து அசத்தினார்.
  • ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி முகம்மது நஸீருதீன்-ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் இளையமகள் மாணவி ஷாஜிதா ஸைனப் என்பவர் 8 -வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதநல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து தேசிய கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி அசத்தினார்.

நிகழ்ச்சியில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் ராமலட்சுமி சங்கிலி, சமுதாயத் தலைவர் பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் முகமது யஹ்யா, மொன்னா முகமது, ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சமூக ஆர்வலர் சேக் முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் குருகண்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News