உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வேதநாயகி அம்மன்.

வெள்ளி ரிஷப வாகனத்தில் வேதநாயகி அம்மன் வீதிஉலா

Published On 2023-07-23 09:55 GMT   |   Update On 2023-07-23 09:55 GMT
  • ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கு சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? அம்மனின் குரல் வலிமை இனிமையானதா என்ற போட்டி ஏற்பட்டது.

அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்ததால், இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதே நேரத்தில் அம்மனுக்கு யாழை பழித்த மொழியம்மை என்ற பெயா் வரலாயிற்று.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆடிபூர திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கொடியேற்றம் 12.7.23 தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் காலை மாலை அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.

21.7.23 வெள்ளி இரவு ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், அர்ச்சனைகளும் நடந்தது. பின்பு இரவு மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரி க்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது 10க்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கலந்து கொண்ட இன்னிசை கச்சேரி நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக் கழக வேதாரண்யம் கிளையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News