உள்ளூர் செய்திகள்

கோபால சமுத்திர கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமாவாசை தர்ப்பணம்

Published On 2022-09-25 06:25 GMT   |   Update On 2022-09-25 06:25 GMT
  • மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பொதுமக்கள் வருகை தந்தனர்.
  • தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கோபாலச முத்திரக்கரையில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளில் மேலும் அதிகமானோர் இங்கு தர்ப்பணம் செய்ய வருவார்கள். அதன்படி இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பொதுமக்கள் வருகை தந்தனர்.

100 பேர்கள் கொண்ட குழுக்களாக பிரித்து அனுப்பி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பலர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இேத போல பல்வேறு கோவில்களிலும் நடந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் பா.ஜ.க. நிர்வாகி குடோனுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகனங்கள் எரிந்து சேதமாகின. இதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News