உள்ளூர் செய்திகள்
கப்பச்சி வினோத் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
- ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் ஏற்பாடு
- மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார் உள்பட பலர் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள், மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கப்பச்சிவினோத் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் ஜெயராமன், நகர அவை தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.