ஆசிரியை திட்டியதாக கூறி போலீசில் புகார் செய்த பள்ளி மாணவர்கள்
- ஆசிரியை மாணவர்களிடம், இனிமேல் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுதி வரவேண்டும் என்று எச்சரித்தாக கூறப்படுகிறது.
- புகார் கொடுங்கள் என்று மற்றொரு ஆசிரியர் கூறியபடி இங்கு புகார் கொடுக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசிராஜன் நகர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 256 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரி யர்கள் உள்ளனர்.
போலீசார் அதிர்ச்சி
இந்தநிலையில் அப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 4மாணவர்கள் அவினாசி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அவர்களை பார்த்த போலீ சார் அதிர்ச்சியடைந்ததுடன், அவர்களிடம் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர்கள் எங்களை ஆசிரியை ஒருவர் திட்டுகிறார். திட்டாமல் இருப்பதற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று மற்றொரு ஆசிரியர் கூறியபடி இங்கு புகார் கொடுக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
ஆசிரியை மீது புகார்
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததால் ஆசிரியை மாணவர்களிடம், இனிமேல் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுதி வரவேண்டும் என்று எச்சரித்தாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அந்த ஆசிரியை மீது போலீ சில் புகார் கொடுக்க சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த போலீசார், மாணவர்களை கவனமாக பார்த்து கொள்ளு மாறு அறிவுறுத்தி மாணவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். ஆசிரியை திட்டியதாக கூறி பள்ளி சிறுவர்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.