உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய கலெக்டர் லலிதா.

சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் வீட்டுமனை பட்டா- கலெக்டர் பேச்சு

Published On 2022-07-27 09:27 GMT   |   Update On 2022-07-27 09:27 GMT
  • சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.
  • தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்தில் அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது.

சீர்காழி:

சீர்காழி அருகே கீழ மூவர்கரை மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிரந்தர பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை டி.ஆர்.ஒ. முருகதாஸ், சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல்ஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

கலெக்டர் லலிதா மீனவ குடும்பங்களுக்கு 122 பட்டாக்களை வழங்கி பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்திற்கு அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்திற்குள் சிறப்பு முகாம்கள் நடத்தி பட்டா விரைவில் முழுமையாக வழங்கப்படும் என்றார்.

விழாவில் சீர்காழி வட்ட வழங்கல் தனி தாசில்தார் சபிதா தேவி, தனிமண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, ஊராட்சித் தலைவர் சரளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News