உள்ளூர் செய்திகள் (District)

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசிய காட்சி.

நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி. 20-வது மாநில மாநாடு - சுப்புராயன் எம்.பி. தொடங்கி வைத்தார்

Published On 2022-12-01 09:51 GMT   |   Update On 2022-12-01 09:51 GMT
  • ஏ.ஐ.டி.யு.சி. 20-வது மாநில மாநாடு நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று தொடங்கியது. இதனை தொழிற்சங்க மாநில தலைவர் சுப்புராயன் எம்.பி. தொடங்கி வைத்தார்.
  • தொடர்ந்து 3 நாட்கள் மாநாட்டில் மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

நெல்லை:

ஏ.ஐ.டி.யு.சி. 20-வது மாநில மாநாடு நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று தொடங்கியது. இதனை தொழிற்சங்க மாநில தலைவர் சுப்புராயன் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கேரள மாநிலம் ஆலப்புலாவில் வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தேசிய அளவிலான ஏ.ஐ.டி.யு.சி. மாநில மாநாடு நடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.

தொழிலாளர்களுக்காக 44 சட்டங்கள் இருந்த நிலை யில் அதனை 4 சட்டங்களாக குறைத்துள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., தேசிய செயலாளர் நிஜாம், விவசாய தொழில் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, கட்டிட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ரவி, துணை பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார், நிர்வாகிகள் அருணாச்சலம், நடராஜன், தொ.மு.ச. சண்முகம், ஹெச்.எம்.எஸ்.ராஜா ஸ்ரீதர், ஐ.என்.டி.யு.சி. சேவியர், ஏ.ஐ.டி.யு.சி. அனவரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 3 நாட்கள் மாநாட்டில் மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

Tags:    

Similar News