உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடிப்பு எதிரொலி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

Published On 2023-11-11 04:02 GMT   |   Update On 2023-11-11 04:02 GMT
  • தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
  • அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் தற்போதே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட தொடங்கிவிட்டனர். அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று இரவு முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கியுள்ளதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரம் 230 ஆக உயர்ந்துள்ளது. காற்று மாசின் தரம் பெருங்குடியில் 169, அரும்பாக்கத்தில் 134, வேலூரில் 123, ராயபுரத்தில் 121, கொடுங்கையூரில் 112 ஆக உயர்ந்துள்ளது.

காற்று மாசு அதிகரிப்பால் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News