உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஓசூரில் 29 பஸ்களில் 'ஏர்ஹாரன்'கள் பறிமுதல்

Published On 2023-07-14 14:53 IST   |   Update On 2023-07-14 14:53:00 IST
  • ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று தணிக்கை மேற்கொண்டார்.
  • 29 பஸ்களில் பல குரல் காற்று ஒலிப்பான், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டன.

ஓசூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று தணிக்கை மேற்கொண்டார்.

அப்போது, அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் 51 பேருந்துகளை தணிக்கை செய்ததில், 29 பஸ்களில் பல குரல் காற்று ஒலிப்பான், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டன.

Tags:    

Similar News