உள்ளூர் செய்திகள்

கோரக்க சித்தர் பீடத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

கோரக்க சித்தர் பீடத்தில் ஐப்பசி பரணி விழா

Published On 2022-11-09 08:13 GMT   |   Update On 2022-11-09 08:13 GMT
  • வடக்குப்பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
  • கோரக்க சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கச்சித்தர் பீடம் ஐப்பசி பரணி விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

18 சித்தர்களில் முதன்மை சித்தரான, கோரக்கச்சித்தர் போகரின் அறிவுரைப்படி நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

அதன்படி வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கச்சித்தர் பீடத்தில் ஐப்பசி பவுர்ணமி விழா மற்றும் பரணி விழா அன்னாபிஷேக நிகழ்ச்சியுடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து ஆலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, கோரக்கச் சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளி நாட்டினர் கலந்துகொண்டு கோரக்கச் சித்தருக்கு தீபம் ஏற்றி வணங்கினர்.

Tags:    

Similar News