உள்ளூர் செய்திகள்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்க கூட்டம்

Published On 2023-08-24 09:38 GMT   |   Update On 2023-08-24 09:38 GMT
  • எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும்.
  • அவுட் சோர்சிங் முறையில் பணிபுரியும் ஊழியர்களை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களாக மாற்றம் செய்திட வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் சேரலநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் 186 நம்பிக்கை மையங்களை, முதற்கட்ட பரிசோதனை மையங்களாக மாற்ற மாட்டோம் என தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும். அவுட் சோர்சிங் முறையில் பணிபுரியும் ஊழியர்களை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களாக மாற்றம் செய்திட வேண்டும்.

நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்றுகொண்டப்படி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதை போல், ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் மாவட்ட பொருளாளர் சிவசண்முகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News