உள்ளூர் செய்திகள்

உரக்கடையில் ஆய்வு நடத்திய வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

உரக்கடைகளில் வேளாண் அதிகாரி ஆய்வு

Published On 2023-02-20 09:35 GMT   |   Update On 2023-02-20 09:35 GMT
  • தனியார் உரக்கடைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
  • இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வாழப்பாடி:

வாழப்பாடி  பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதில்லை. தரமற்ற போலியான உயிர் நுண்ணூட்ட இடுபொருட்களை விற்பனை செய்வ தாகவும், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படுமென, சேலம் மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்க செயலாளர் முருகன் தெரிவித்தார்.

இதன் எதிரொலியாக, வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகலாதேவி தலைமையில், வாழப்பாடி மற்றும் பேளூர் பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், வேளாண்மைத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது யூரியா, உரம் உள்ளிட்ட இடுபொருட்க ளின் இருப்பு நிலை சரி பார்த்ததோடு, பயோ பூச்சிக்கொல்லி மருந்துகளின் மாதிரிகளின் உண்மை த்தன்மையை அறிய மாதிரி கள் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.எந்த பொருளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய க்கூடாது. விவசாயிகள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். யூரியா, உரம் வாங்க வரும் விவசாயிகளிடம், இந்த தயாரிப்பு நிறுவனங்களின் மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்ப டுத்தக்கூடா தென, உரக்கடை விற்பனை யாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. விதிமுறை களை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகள், இடுபொருட்கள் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News