உள்ளூர் செய்திகள்

சூளகிரி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் முன்பு கழிவு நீர் தேங்கி உள்ளதை படத்தில் காணலாம். 

சூளகிரியில் செயல்படாமல் உள்ள வேளாண்மை அலுவலக கட்டிடம்

Published On 2023-02-17 15:27 IST   |   Update On 2023-02-17 15:27:00 IST
  • புதிய கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.
  • பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவகம் 60, 70 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

பழைய கட்டிடம் என்பதாலும் தானிய கிடங்கு சிறிய அளவு உள்ளதாலும் கடந்த அ,தி,மு,க ஆட்சியில் புதிதாக வேளாண்மை கட்டிடம் கட்ட இடம் பார்த்து வந்தனர்.

பின்பு சூளகிரியில் இருந்து உத்தனபள்ளி சாலை செல்லும் வழியில் சூளகிரி காவல் நிலையம் அருகே அரசு இடம் இருந்தது. 5 அடி பள்ளமான இடத்தில் அவசர அவசரமாக ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.

பின்பு பழைய அலுவலகத்தில் இருந்து அனைத்து அலுவலக பொருட்களை ஏற்றி வந்து புதிய அலுவலகம் இயங்கி வந்தது. கழிவு நீர் கால்வாய் அருகே பள்ளத்தில் கட்ட பட்ட கட்டிடம் என்பதால் அனைத்து கழிவு நீர்களும் புதிய கட்டிட வளாகத்தில் புகுந்ததாலும், மழை வந்தால் அனைத்து மழை நீரும் வந்து சேர்வதால் அலுவலர்கள் ,விவசாயிகள் வர முடியாததாலும் மீண்டும் பழை ய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.

Tags:    

Similar News