உள்ளூர் செய்திகள்

கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வேளாண் களப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகளை படத்தில் காணலாம். 

வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

Published On 2022-12-24 15:46 IST   |   Update On 2022-12-24 15:46:00 IST
  • தூய்மை பாரத இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், வேளாண் கல்லூரி களப்பயிற்சி மாணவிகளால் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாரம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப்புறப் பகுதிகளில், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்த ஊரக வளர்ச்சித் துறையின் தூய்மை பாரத இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், வேளாண் கல்லூரி களப்பயிற்சி மாணவிகளால் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் குறைத்தல், துணிப்பைகளை பயன்ப

டுத்துதல், மக்கும் மற்றும் மக்காக் குப்பைகளைப் பிரித்துக் கொட்டுதல், கழி வறைகளை பயன்படுத்துதல், சுகாதாரமான ஊராட்சியை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News