உள்ளூர் செய்திகள்

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து வேளாண் அதிகாரி ஆய்வு

Published On 2022-07-20 10:06 GMT   |   Update On 2022-07-20 10:06 GMT
  • உரங்கள் வழங்கும் பணிகளை இலக்கின்படி விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  • உரங்கள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரங்கள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்தார்.

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட இலவச ரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ டி.ஏ.பி. 50 கிலோ பொட்டாஷ் 25 கிலோ என ரூ.2465 மதிப்புள்ள ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்ப டுகிறது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானிய விலையில் இலவசமாக ரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகளை சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உரங்கள் இருப்புப் பதிவேடு, உரங்கள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரங்கள் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரங்கள் வாங்க வந்த பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அருகில் உள்ள சோழபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இலவச ரசாயன உரங்கள் வழங்கும் பணிகளை இலக்கின்படி விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது தஞ்சை வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர், தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பால சுப்ரமணியன், கும்பகோணம் வேளா ண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) தேவி கலாவதி ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News