உள்ளூர் செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கம் தொடங்கியது

Published On 2023-06-19 14:27 IST   |   Update On 2023-06-19 14:27:00 IST
  • நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது.
  • 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணி இதுவரை முழுமையாக நிறைவடையாமல் உள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் சந்திப்பு பஸ் நிலையம் பஸ்கள் போக்குவரத்து, பயணிகள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிப்பு

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப் பட்டது. இதில் நெல்லை 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பஸ் நிலைய த்தையும் முழுமை யாக இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளை தொட்ட பிறகும் இதுவரை முழுமையாக நிறைவடை யாமல் நிற்கிறது. இதனால் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பயணிகள் கோரிக்கை

எனவே இந்த பஸ் நிலைய பணிகள் முழுமை யாக முடிவடையும் வரை காத்தி ருக்காமல் வியா பாரிகள், பொது மக்கள், ரெயில் நிலை யத்திற்கு வரும் பயணிகள் ஆகியோ ரின் நலன் கருதி தற்காலி கமாக பஸ் நிலையத்தை சுற்றியாவது பஸ்கள் இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 10 நாட்களாகவே மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் பஸ் நிலைய பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிக்காக சுற்றிலும் அடைக்கப் பட்டிருந்த தகரங்களை உள்ளே தள்ளி வைத்து விட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

மாநகர பஸ்கள் இயக்கம் தொடங்கியது

அதேநேரத்தில் முதல்கட்டமாக மாநகர பகுதிக்குள் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் விரிவாக்க பகுதிகள், புதிய பஸ் நிலையங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை மட்டுமே சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராஜா பில்டிங் சாலையில் பயணிகள் வசதிக்காக 5 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டது. தற்காலிகமாக பஸ்களை இயக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் அந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிர மணியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் உலகநாதன், கிட்டு, கந்தன், பவுல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை

பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறும்போது, நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இன்னும் 60 நாட்களில் திறக்கப்படும். சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிய சாலைகளும் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

சந்திப்பு பஸ் நிலையம் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்களும், வியாபாரிகளும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பணிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

இதுகுறித்து நெல்லை அருகே உள்ள தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த மீனா கூறும்போது, நான் கொங்கந்தான் பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படாததால் தினமும் தாழையூத்தில் இருந்து வரும் பஸ்சை எதிர்பார்த்து அதில் ஏறி அங்கிருந்து வண்ணார் பேட்டை செல்கிறேன். பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்து தினமும் சென்று வந்தேன்.

இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்கப்படுவதால் பஸ் பயணம் சிரமம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இங்கு வந்து இறங்கினால், சுற்றிலும் அனைத்து விதமான கடைகளும் இருக்கிறது. இதில் நமக்கு தேவையான பொருட்கள் எதுவானாலும் எளிதாக வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் வண்ணார் பேட்டையில் அப்படி இல்லை என்றார்.

தென்காசி- பாபநாசம் பஸ்கள்

சந்திப்பு பகுதியில் ஒரு ஸ்டூடியோ வில் வேலை பார்க்கும் ஆலங் குளத்தை சேர்ந்த ரமேஷ் கூறு கை யில், 5 ஆண்டுகளுக்கு பிறகு பஸ்களை இயக்கு வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது டவுன் பஸ்களை இயக்கியது போல், பாப நாசம், சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க வேண்டும். ஏனெனில் அந்த இடங்களில் இருந்து சந்திப்பில் உள்ள கடைகள், நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்கள் தனியார் கண் ஆஸ்பத்திரி, தேவர் சிலை பகுதிகளில் இருந்து நடந்து தான் வரவேண்டி உள்ளது. எனவே விரைவில் அதனையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கழிப்பறை வசதி

நெல்லை தச்ச நல்லூரை சேர்ந்த வாடகை கார் டிரை வர் முருகன் கூறுகை யில், பஸ்கள் ஓட தொடங்கி உள்ளதால் பள்ளி செல்ப வர்கள், பெண்கள் நிம்மதி அடைந்து ள்ளனர். இங்கு வெவ்வேறு வழித்தட ங்களுக்கு செல்லும் பஸ்களு க்காக 5 நிறுத்த ங்கள் அமைக்க ப்பட்டு ள்ளது. ஆனால் அதனை முறையாக எடுத்து கூற போக்குவரத்து அதிகாரிகள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.

எங்கு நமது ஊருக்கான பஸ் நிற்கும் என்று தெரியாமல் வயதானவர்கள் சற்று சிரமப்படுகின்றனர். அதேபோல் கழிப்பறை வசதிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவை முக்கியம். எனவே ஓரிரு நாட்களில் அதனையும் நடை முறைப்படுத்த வேண்டும். மழை பெய்துவிட்டால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடும். எனவே அதற்கு முன்பாக சாலை அமைக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News