உள்ளூர் செய்திகள்

கோவை, நீலகிரியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Published On 2023-07-03 09:50 GMT   |   Update On 2023-07-03 09:50 GMT
  • கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
  • தீயணைப்பு, பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன

கோவை,

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் சகல உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

தீயணைப்பு அலுவலகங்களில் ரப்பர் படகு, அறுவை எந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளதா? என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவை தெற்கு தீயணைப்பு அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்க ளை, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வ தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினரும் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News