உள்ளூர் செய்திகள்

கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்த போது எடுத்த படம்.

தலைமை அலுவலக தீர்ப்பு: நெல்லையில் எம்.ஜிஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

Published On 2022-07-21 09:57 GMT   |   Update On 2022-07-21 09:57 GMT
  • சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.
  • நெல்லையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். நெல்லையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அங்கும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், திருத்து சின்னதுரை, வக்கீல் ஜெனி, காந்தி வெங்கடாச்சலம், மேகை சக்திகுமார், சண்முககுமார், தென் மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ், நிர்வாகிகள் சீனி முகமது சேட்டு, கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பாறையடி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News